வலையுலக நண்பர்கள்

Wednesday, 27 April 2011

கன்னி இடுகை

என் முதல் இடுகையை தொடங்க நல்ல நாள் இன்றுதான்,
 இது கன்னி இடுகை அதாவது சட்டமன்றத்தில் ஒரு  உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர் முதன் முதலாக பேசும் பேச்சு கன்னிப்பேச்சு என்பார்கள், அதுபோல நான் முதன் முதலாக இடும் இந்த இடுகை கன்னி  இடுகை, இந்த இடுகையில் என்ன எழுதலாம், என்று யோசிக்கையில், ஏன் என்னைப்பற்றி எழுதக்கூடாது என்று தோன்றியது, முதல் இடுகை யாரும் நம் மனம் நோக எதுவும் சொல்லப்போவதில்லை
, அதற்காக கண்டதையும் கிறுக்கவும் கூடாது, என்று பல முடிவுகள் எடுத்த பின் எழுதும் என் முதல்இடுகை 


 சமர்ப்பணம்  

என் வலைப்பூவின் நண்பர்களுக்கு என்றும் சுழலும் இந்த சாட்டைக்கு
வயது 30 , தொழில் எலெக்ட்ரானிக்ஸ் சர்வீஸ் , 
ஊர் கோவை, நண்பர்கள் பலர் ,
எதிரிகள்  சமுதாயத்தை தவிர எவருமில்லை, ஒவ்வொரு நொடியும் அடைத்து வைத்திருக்கும், எண்ணிலடங்கா அதிசயத்தை தேடி பயணிக்கிறேன்,