கொங்கு மாநகராம் கோவையை பற்றி கோவையின் பெருமை-1
பிணியிலே (நோயிலே) கொடுமையான பிணி எதுவென்றால் பசிப்பிணி தான் என்கிறார் அவர் ,
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
இப்படி ஒரு உணவகமா என்று நான் முதல் முறை சென்ற போது அசந்து விட்டேன், இதே உணவகத்தின் ரேஸ் கோர்ஸ் கிளையில் சாப்பாடு ஒன்று ரூபாய் 350 /- அனால் இந்த கடையில் நம்மால் முடிந்ததை கொடுத்தால் போதும், எனக்கெதிரில் அமர்ந்து சாப்பிட்டவர் மூன்று பேர் சாப்பிட்டு விட்டு ரூபாய் 2000 /- வைத்துவிட்டு போனார்,
அதை வைத்து குறைந்தது நூறு பெரிக்கவது உணவளிக்கலாம் அல்லவா,
அடைத்தான் இவர்கள் சேவை மனப்பான்மையுடன் செய்து வருகிறார்கள்,
முதலாளி இல்லாத இடம்தானே என்று ஊழியர்களோருவரும் அலட்சியமாக நடப்பதில்லை, அந்த கடையில் உணவின் தரமோ, சுவையோ, சுகதரமோ எதுவும் குறை சொல்ல முடியாது, பலதரப்பட்ட மக்களும் வந்து உணவருந்தி செல்கின்றனர்,
இத்தனைக்கும் இப்படி ஒரு வசதி இருப்பது கோவையிலேயே பலபேருக்கு தெரிவதில்லை, இப்படி ஒரு விஷயத்தை வலைப்பூவில் உங்களுடன் பகிர்ந்து கொள்வது பெருமையாக உள்ளது. கோவை வரும்போது இந்த உணவகத்தில் தவறாமல் உணவருந்தி உங்கள் கருத்தையும் வெளியிடுங்கள், பல பெருமைகள் கொண்ட கொங்கு மண்ணிற்கு பெருமை சேர்க்கும் ஒரு விஷயம் ஹோட்டல் அன்னலட்சுமி
ஏமாற்றத்தை தவிர்க்க பிரதி திங்கள் உணவகம் விடுமுறை